Happy Wedding Day (Anniversary) Wishes Kavithai And Greeting Images, Tamil Thirumana Naal Vazhthu (valthu) Kavithai And Wishes Images… Happy Wedding Day (Anniversary) Kavithai
தாய் உறவாய் உன் மடி கொடு
தந்தை உறவாய் என் தலை கோது
பிள்ளை உறவாய் அக்கறை செய்
சீர்மிகு அன்பினால் நெஞ்சில் தாங்கு
இன்பம் காணுமே இல்லறம்…
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்…
——————————————————————————
உங்கள் வாழ்வில்
இனி பதிக்கும்
ஒவ்வொரு சுவடுகளும்
இனிமைகளின்
முழுமையாகட்டும்…
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்…
Ungal vazhvil ini pathikum ovvoru suvadugalum inimaigalum mulumaiyaagattum…! Happy wedding anniversary…!
அப்பா அம்மா விற்கு திருமணநாள் வாழ்த்துக்கள்:
60 வருட வாழ்வு நல்முத்துக்களால் (பிள்ளைகள்)
நிறைந்து ஜொலிக்கிறது…
இனித்திடும் இல்லறம்
இன்னும் தொடரட்டும் உங்கள் வாழ்வு…
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்…
——————————————————————————
இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம் அன்பினால் எழுதும்
காவியம் இல்லறம்…
தொடரட்டும் இனிதே உங்கள் நல்லறம்…
உங்கள் திருமண வாழ்வு நல்லதாய் அமைய
எங்கள் வாழ்த்துக்கள்…!
Iru ullangal inaiyum aarambam thirumanam inaintha iru karam anbinaal eluthum kaaviyam illaram thodarattum inithe ungal nallaram…! Ungal thirumana vazhvu nallathaai amaiya engal vazhthukal…
——————————————————————————–
இணை பிரியாமல் மகிழ்ந்தே வாழவும்
ஈடில்லாத காதலை குறையில்லாமல் பகிரவும்
வாங்கி வந்த வரமே “திருமணம்”
உங்கள் வாழ்விலும் தொடர
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்…!
Inai piriyaamal magilnthe vazhavum eedilaatha kaathalai kuraiyillaamal pagiravum ungal vazhvilum thodara…! Iniya thirumana naal vazhthukkal…! Happy anniversary (wedding day)…!
——————————————————————————-
இரண்டுபேர் ஒருவராக
இரு உயிர் ஒன்றாக
இரு ஆன்மா கலந்திட
வாழ்க்கை பயணம் தொடரட்டும்…!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்…!
Irandu per oruvaraaga iru uyir ondraaga iru aanmaa kalanthida vazhkai payanam thodarattum…! Happy wedding anniversary…!
——————————————————————————-
எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே
கொட்டும் மழையும் பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த,
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்…
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்…
நீங்கள் கரம் கோர்த்த நாள்..
உங்கள் வாழ்வில் வரம்
சேர்த்த நாள்…
இனிய மணநாள் வாழ்த்துக்கள்…
Neengal karam kortha naal ungal vazhvil varam sertha naal… Happy wedding anniversary…!
——————————————————————————–
நலம் வாழ்க, சுகம் சூழ்க
வளம் சேர்க, அருள்பெருக
மனமார்ந்த திருமணநாள்
வாழ்த்துக்கள்…!
Nalam vazhga sugam soolga valam serka arulperuga manamaarntha thirumana naal vazhthukkal…!
——————————————————————————
மௌனங்களால் வார்த்தைகள்
மொழிப் பெயர்ப்பாகி
வாழ்வின் பக்கத்தில்
அவைகள் கவிதையாகி
ஆனந்தம் வாழ்ந்திட
இரு உயிர்களின் புரிதலில்
தான் விடையுண்டு…
திருமண வாழ்த்துக்கள்…!
——————————————————————————–
ஒருத்தர் மேல ஒருத்தர்
அன்பை காட்டி
அக்கறைய கூட்டி
தாம்பத்திய பயணத்தை
தொடருங்கள்…
திருமண நாள் வாழ்த்துக்கள்…!
——————————————————————————–
முடிவுற்ற அன்பும்
முடிந்துபோகா மகிழ்ச்சியும்
என்றும் நிலைக்கட்டும்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்…!
Mudivutra anbum mudinthu pogaa magilchiyum endrum nilaikattum…! Happy wedding anniversary…!
கடவுள் உங்கள் திருமண வாழ்வை
தொடர்ந்து ஆசீர்வதிக்கட்டும்
இனிய குடும்பமாக வாழ்வை தொடர
என் வாழ்த்துக்கள்…
திருமணநாள் வாழ்த்துக்கள்…!
Kadavul ungal thirumana vazhvai thodarnthu aaseervathikattum iniya kudumbamaaga vazhvai thodara en vazhthukkal…! Happy wedding anniversary…!
——————————————————————————
இணைவது இருமனம்
நடப்பது திருமணம்
வாழ்த்துவது
எங்கள் மனம்
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் மச்சி…!
Inaivathu thirumanam nadapathu thirumanam vazhthuval engal manam…! Happy wedding anniversary da machi…!
——————————————————————————-
எவ்வளவு வசதிகள் வீட்டிற்கு உள்ளே
நிறைந்தாலும்
ஒரு மணி நேரம் நீ வீட்டில்
இல்லையென்றால் வீடு வீடாக
தெரிவதில்லை…
வாழ்க்கை இன்னும் காரசாரமாக
போறதுக்கு நீ மட்டுமே காரணம்…
இந்த திருமண நாளில் உன்னை வாழ்த்துவதில்
சந்தோஷ படுகிறேன்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்…!
————————————————————————————
இணையட்டும் இதயங்கள்
இனிக்கட்டும் மணநாள்
உணரட்டும் இல்லறம்
அது உரைக்கட்டும்
அன்பறம்…
திருமணநாள் வாழ்த்துக்கள்…!
Inaiyattum ithayangal inikattum mana naal unarattum illaram athu uraikattum…! Happy wedding day anniversary….
——————————————————————————–
குன்றாத வயது
கலையாத இளமை
பிணியற்ற உடல்
தளராத மனம்
தவறாத சந்ததி
தாழாத செல்வம் பெற்று
நூற்றாண்டு வாழ வாழ்த்துகிறேன்…
திருமண நாள் வாழ்த்துக்கள்…!