நீ தொலைபேசியில் பேசும்போது
சின்னதாய் உன்குரலில்
மாற்றமென்றாலும்,
நான் துடித்துப்போன காலங்கள்…..
உன் முகம் காணாவிட்டாலும் கூட
உன் முகவாட்டம் அறிந்து
என்னாச்சு என்னாச்சு என்று
இடைவிடாது நலம் விசாரித்த
காலங்கள்…
ஒருநாளாவது உன் குறும்தகவல்
வரவில்லையென்றால்,
செல்லமாய் சின்னச்சின்னதாய்
சண்டையிட்ட காலங்கள்……
இப்படி இன்னும் சொல்லாமல்
மனதோடுமட்டும் பூட்டிவைத்து
அழகுபார்க்கும் சம்பவங்கள்……
இவற்றையெல்லாம் தினம் தினம்
மனதுக்குள் மீட்டிப்பார்ப்பதில்,
எட்டிப்பார்த்த கண்ணீர்த்துளிகளின் ஈரம்
என் விழிவழி வழிந்து
தலையணை நனைத்து
தடாகமாகிப்போக
மிதந்துகொண்டிருக்கிறேன்
தண்ணீரில் அல்ல
என் கண்ணீரில்….
Sad love kadhal kavithai lines in tamil – Love sogam kavithai